Monday, June 4, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 8

பள்ளிப்படை :


சோழ, பாண்டிய, கங்க மன்னர்களின் பள்ளிப்படை குறித்து கேள்விப்பட்டிருப்போம். பழுவேட்டரைய மன்னர் ஒருவரின் பள்ளிப்படை குறித்த தகவல் தரும் ஒரு சிறிய கல்வெட்டினை இன்று காண்போம்.

அரியலூர் மாவட்டம் பழுவூரில் பழுவேட்டரையர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் கோவில்களை அறிந்திருப்போம்.அதில் ஒன்றான கீழப்பழுவூரில் இந்த கல்வெட்டு உள்ளது.

அதுவும் கோவிலில் அல்ல, கோவிலின் அருகேயுள்ள புதிதாக எழுப்பப்பட்ட கோவில் அலுவலகத்தின் கிழக்குச்சுவரில் இரண்டு துண்டுகல்வெட்டுகள் உள்ளது.  அதில் ஒன்றுதான் இந்த பள்ளிப்படை கல்வெட்டு.

இப்பள்ளிப்படை மறவன் கண்டன் என்பவருக்கு அவருடைய மகன் கண்டன் மறவன் என்பவரால் எழுப்பப்பட்ட கோவில் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு அறிஞர்கள் சு.ராஜகோபால், இரா.கலைக்கோவன் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளனர்.
அதிலுள்ள வாசகம்

1.க்காக.....
2.டுப்பித்த பள்ளிப்படை ஸ்ரீகண்டஈ.....
3.வட்டரையர் கண்டன் மறவனா.....
4.து தரவேண்டுமென்று கொங்....
5.யக் கிழவரோமும் அடிகள்....
6.ர் எடுப்பித்த பள்ளிப்படை ஸ்ரீகண்டஈ....
7.றப் பொன்னும் அந்தராயமும்.......
(ARE 128 of 1987-88)

மேற்குறிப்பிட் தகவலையளிக்கும் இந்தக் கல்வெட்டு இன்று சுண்ணாம்புப் பூச்சில் சிக்கிக் கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment