Thursday, June 28, 2018

கல்வெட்டின் நிலையறிதல் -9



பிற்காலசோழசாம்ராச்சியத்தினை அடிகோலியவரும்  கல்வெட்டுகளில்   பரகேசரி என்றும் தன்னை தஞ்சைக்கொண்ட கோன் எனகூறிக்கொண்டவருமான விஜயாலசோழனின் [846-881] வரலாற்று சான்றுகளைப்பகரும் அரிதானக்கல்வெட்டுகளில்  திருக்கோவிலூரில் கிடைக்கப்பெற்ற நடுகல் தற்போது  சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது , புதுக்கோட்டைப்பகுதிகளில் அவ்ரதுகலைப்பாணியாக நிற்கின்ற நார்த்தாமலை, பனங்குடி போன்ற இடங்களில் இவரது கல்வெட்டுகள் தற்போது நமக்கு காணக்கிடைக்கவில்லை ,
திருவேங்கைவாசலில் தான்
ஆட்சிப்பீடத்தை அலங்கரித்த செய்தியை அழகாக  செங்கோல் ஏந்திய  ஐந்தாம் ஆண்டு இறைவனுக்கு நாதன் மழநாட்டுவேள்  என்பவர் நொந்தா விளக்கு தானம் கொடுத்ததை  பறைசாற்றுகிறார் ,

 1 , ஸ்வஸ்திஸ்ரீ பரகேசரி செங்கோல் பற்றிய வாண்டஞ்சில் திருவேங்கைவாயில் சிவர்க்கு விளைமா மேல் மாதா 
2 , ....க்கு நாதன் மழநாட்டு வேள் வெச்சான் மேதக்கன நந்தாவிளக்கு 

மேலும் கயஅ  ஆண்டில் வல்லநாட்டை சார்ந்த கவிர்ப்பால் கலையமங்கலத்தார் என்பவர்கலால் இறைவனுக்கு நந்தாவிளக்கெறிய தானம் கொடுத்த செய்தியும் உள்ளது .

1 , (கோப் )பரகேஸரி பன்மர்க்கு யாண்டு கயஅ  ஆவது இவ்வாண்டு பெருவாயில் நாட் 
2 , ( திருவேங்கை ) வாயில் திருமேற்றளி மஹாதேவர்க்கு வல்லநாட்டு கவிற்பாற் கலையமங்கலத்து ம 
3 , ....எட்டி ஆகிறே தாழி எள் சந்திராதித்தவர் எறிவதுக்கு திருநொந்தா விளக்கு 
4 , ...து இவை காசி நன் உழக்களந்..... சிதைந்துள்ளது .
#புதுக்கோட்டை_மரபுநடையில் நாம் பார்கவிருக்கும் தளங்களில் #திருவேங்கைவாசல் திருமேற்றளி மகாதேவர் ஆலயமும் ஒன்று 

0 comments:

Post a Comment