1200 ஆண்டுகள் தொன்மையான குமிழிக்கல்வெட்டு :
புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிப்பட்டியில் பல்லவர் காலத்திய குமிழிக் கல்வெட்டொன்று இருப்பதாக அறிந்ததைக் காணச் சென்றோம். நீண்ட தேடலில் அக்கல்வெட்டு ஊரில் இல்லாது அவ்வூருக்கு தெற்காக இரண்டு கி.மீ தொலைவில் நம்பம்பட்டி என்ற சிற்றூர்க்கு முன்னதாக ஒரத்திக்குளம் என்று தற்கால பெயரால் அழைக்கப்படும் ஒரு ஊரணியில் இருப்பதைக் கண்டடைந்தோம். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் கிராமத்தினர் தூர்வாரிக் கொண்டிருக்க, இந்நாளில் பெயரளவில் ஊரணியாக விளங்கும் இவ்விடத்தே சுமார் 15 அடி உயரமுள்ள குமிழிக்கல்லுக்கு நடுவே தெளிவான தமிழிலில் அழகாக வெட்டப்பட்டுள்ள
ஸ்ரீநந்திபோத்தரை
யர்க்கி யாண்டிருபத்தைந்தா
வது ஸ்ரீஆரிதம் புல்லன்
மகன் புல்லய கடம்ப
ன் செய்வித்த கற்குமிழி||
என்ற கல்வெட்டானது நன்னிலையில் காணப்படுகிறது. ஆற்றிய அறமென்றும் அழிந்து போவதில்லை என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது இக்கல்வெட்டு.

மிக்க நன்றி சார். எனது ஊரில் உள்ள சிறப்பை தங்கள் வாயிலாகத்தான் அறிய முடிந்தது.
ReplyDeleteஇணைந்தே இன்னும் பல வரலாற்று தகவல்களை வெளிக் கொணர்வோம்.