Monday, July 2, 2018

தொல்லியல் எச்சங்கள்-3

திருச்சி -தஞ்சை புறவழிச்சாலையினிடையே ஒரு ஊரிலுள்ள முற்காலச் சோழர் சிற்பங்கள் (பாதுகாப்பு காரணம் கருதி சரியான இடத்தினை இங்கே பகிரவில்லை)

கொடும்பாளூர் கலையம்சத்தை ஒத்த வண்ணம் இச்சிலைகள் உள்ளன. கேட்பாரின்றி புதர்மண்டிக் கிடந்த இச்சிற்பங்கள் இன்று ஊர்மக்களின் முயற்சியால் சிறியமேடையொன்று அமைக்கப்பட்டு வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இச்சிலைகளின் அருகே கோவிலின் கட்டுமான எச்சங்கள் சிதறியுள்ளன. கொஞ்சம் விரிவாக அகழாய்வு செய்தால் நிச்சயம் நிறைய எச்சங்கள் கிடைக்கும்.

இச்சிற்பங்கள் குறித்த தகவல்களை திருச்சி தொல்லியல்துறை அலுவலகத்திலும், ஆவணம் தொல்லியல்கழக அமைப்பிலும் தெரிவித்துள்ளோம். விரைவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக துறைசார் பெரியவர்கள் உறுதியளித்துள்ளனர்.











2 comments: