பல்லவராயன் பேட்டை சாசனம் தொடர்ச்சி :
பல்லவராயன் பேட்டையில் ராஜாதிராஜரின் 15ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது.
இதில் இரண்டாம் ராஜராஜனின் மெய்கீர்த்தியான 'பூமருவிய திருமாதும்' என்று தொடங்குகிறது. ஆய்வாளர்கள் இச்சாசனத்திற்கு இரண்டு கருத்துகளை கொடுத்தனர்.
முதலாவதாக இது இரண்டாம் ராஜராஜனே என்றும் தவறுதலாக இராஜாதிராஜர் என வெட்டப்பட்டுள்ளது எனக் கருதினர்.
இவ்வாதத்தினை ஏற்றால் இச்சாசனம் 1161ம் ஆண்டு எனக் கொள்ள வேண்டும்.
ஆனால் நேற்று நாம் கண்ட கல்வெட்டின்படி 1163ல் முடிசூடி 1166 ல் தான் இராஜாதிராஜன் என திருநாமம் சூடுகிறார்.
எனில் 1161 லே எப்படி இப்பெயரை எழுத முடியும்? மேலும் இக்கல்வெட்டில் 15ம் ஆட்சியாண்டு மிதுனமாதம் என்றுள்ளது. இதிலிருந்து இக்கல்வெட்டு 1180 ஜுன் மாதத்திற்கு உரியது என்றே கொள்ளுதல் பொருத்தமாகும். இதுவே அவனது இறுதிஆட்சியாண்டு கல்வெட்டாகும்.
இதிலிருந்து நாம் ஈண்டுகாண்பது என்னவெனில் 1166 ஐனவரியில் இராஜாதிராஜன் ஆட்சி ஏறினான்.சோழ நாட்டில் 14 வருடங்கள் முழுமையாக ஆட்சிபுரிந்தான். பின்னர் கி.பி 1178ல் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியேறிய பின் இருவரும் இணைந்து இரண்டு வருடம் ஆட்சி புரிந்தனர். பின் 1180 ஜுனிற்கு மேல் ஆந்திரா சென்று அங்கிருந்து நிலையாய் ஆட்சிபுரிந்தான் இராஜாதிராஜன்.
அவ்வகையில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. பிரம்மாண்டமான பெரிய கற்றளி இன்று தன் பொலிவிழந்துள்ளது.
வரலாற்று ஆர்வலர்கள் இக்கோவிலையும் காணுதல் நலம்...

0 comments:
Post a Comment