குலாளர் கோட்டையூர் குடவரை : புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் எச்சங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு பன்முக மாவட்டம். இங்கே தொல்குடி மாந்தர்களின் ஈமக்காடு, பல சமணச்சிலைகள், படுக்கைகள், பிராமி கல்வெட்டுகள், களப்பிரர் வட்டெழுத்து, கிரந்த எழுத்துகள், இசைகல்வெட்டுகள், நிரம்பியுள்ள மாவட்டம். இங்கே முழுமையான, முற்றுபெறாத, சிறிய வகை குடைவரை என பல குடைவரைகள் காணப்படுகின்றன, அக்குடைவரைகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் ஒரு எளிய குடைவரைக்கோவிலை காண்போம்.
திருமயத்திலிருந்து அரிமழம் சாலையில் கடியாபட்டிக்கும் ராயவரத்திற்கும் இடையில் இடது பக்கம் இந்த ஊர் அமைந்துள்ளது.
இக்குடவரையில் கருவறை மட்டுமே அகழப்பட்டுள்ளது. உள்ளே லிங்கம் தாய்ப்பாறையில் வெட்டப்பட்டுள்ளது. வாயிலுக்கு நேரிருக்குமாறு தளத்தின் அடிப்பகுதியில் இருபடிகள் வெட்டப்பட்டுள்ளது. படிகளை ஒட்டிய தளத்தின்பகுதி சற்றே உயர்த்தி வெட்டப்பட்டுள்ளது.
கருவறை தரையில் ஜகதி, கண்டம், தாமரைவரி போன்ற உறுப்புகள் பெற்ற ஆவுடையார் கருவறையின் பின்பகுதியில் ஒன்றியவாறு அமைக்கப்பட்டுள்ளார்.
இக்குடவரையின் காலம் இன்னதென கணிக்க முடியவில்லை. அருகே கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை, பெரும்பாலும் கோவில் பூட்டியே கிடக்கிறது, பிரதோஷம், சிவராத்திரி மட்டும் கோவிலில் பூஜை நடைபெறுமாம். அருகேயுள்ள ஊர்காரரான பழனிவேல் என்பவரிடம் சாவி இருக்கும். தேவைப்படின் அவர் உதவி செய்கிறார்.
மேலதிக தகவல்கள்:
1.ஆவணம் இதழ்.
2.கலைக்கோவன் அய்யா (புதுக்கோட்டை மாவட்டக் குடவரைகள்)

முதலில் ஒரு எளிய குடைவரைக்கோவிலை காண்போம்.
திருமயத்திலிருந்து அரிமழம் சாலையில் கடியாபட்டிக்கும் ராயவரத்திற்கும் இடையில் இடது பக்கம் இந்த ஊர் அமைந்துள்ளது.
இக்குடவரையில் கருவறை மட்டுமே அகழப்பட்டுள்ளது. உள்ளே லிங்கம் தாய்ப்பாறையில் வெட்டப்பட்டுள்ளது. வாயிலுக்கு நேரிருக்குமாறு தளத்தின் அடிப்பகுதியில் இருபடிகள் வெட்டப்பட்டுள்ளது. படிகளை ஒட்டிய தளத்தின்பகுதி சற்றே உயர்த்தி வெட்டப்பட்டுள்ளது.
கருவறை தரையில் ஜகதி, கண்டம், தாமரைவரி போன்ற உறுப்புகள் பெற்ற ஆவுடையார் கருவறையின் பின்பகுதியில் ஒன்றியவாறு அமைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக தகவல்கள்:
1.ஆவணம் இதழ்.
2.கலைக்கோவன் அய்யா (புதுக்கோட்டை மாவட்டக் குடவரைகள்)
0 comments:
Post a Comment