சிலமாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்தில், வரலாற்றில் ஆர்வமுள்ள நல்லுல்லங்கள் இணையதளம் வழியாக ஒன்றிணைந்து அகத்தீஸ்வரர் என்ற மூன்றாம் குலோத்துங்கன் கால கோவிலை உழவாரம் செய்து மீட்டோம். அவ்வூரிலுள்ள தொன்மையான பிடாரி கோவிலில் முதலாம் ஆதித்தன் கால கல்வெட்டு ஒன்று துண்டு துண்டாக கோவில் வாசலருகே புதர் மண்டியநிலையில் கவனிப்பாரற்று கிடந்தது. இக்கல்வெட்டானது முன்னரே கரு.இராஜேந்திரன் அய்யா அவர்களால் படியெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதன் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. அக்கல்வெட்டின் வாசகம் காண்போம்.
1.ஸ்வதிஸ்ரீ ஸ்ரீ இராகேஸரி பன்
2.மர்க்கி யாண்டு 3 ஆவது இவ்வாண்டு
3.வயலக நாட்டு வயலகத்து குளத்துக்கு
4.குளப்பட்டி செய்தநிலம் இவ்வூர் நாட்டா
5.ர் பெருஞ்செய்யும் நாற்றுக்கால் துடர்செய்யும்
6.இவையிரண்டும் நிலன் மூன்றுமா இக்குள
7.த்துக்கு சந்திராதித்தவல் நிப்பதாக செ
8.ய்தோம் வீரசோழ இளங்கோ வேளார் வே
9.ள் படையும்உடநிலை சேவகரும் இ
10.ஞ்சது இது ரக்ஷிப்பான் பாதம் எங்க
11.ள் தலைமேது இபந்மாஹேச்வர் ரகஷை
2.மர்க்கி யாண்டு 3 ஆவது இவ்வாண்டு
3.வயலக நாட்டு வயலகத்து குளத்துக்கு
4.குளப்பட்டி செய்தநிலம் இவ்வூர் நாட்டா
5.ர் பெருஞ்செய்யும் நாற்றுக்கால் துடர்செய்யும்
6.இவையிரண்டும் நிலன் மூன்றுமா இக்குள
7.த்துக்கு சந்திராதித்தவல் நிப்பதாக செ
8.ய்தோம் வீரசோழ இளங்கோ வேளார் வே
9.ள் படையும்உடநிலை சேவகரும் இ
10.ஞ்சது இது ரக்ஷிப்பான் பாதம் எங்க
11.ள் தலைமேது இபந்மாஹேச்வர் ரகஷை
வயலோகத்திலுள்ள குளத்தின் பராமரிப்பிற்கு ஆதித்தனின் அதிகாரியான வீரசோழ இளங்கோவேளாரின் வேள்படை நிலக்கொடை அளித்த கல்வெட்டு இது. சந்திரன் சூரியனும் இருக்கும்வரை இத்தர்மம் தொடர வேண்டுமென்றும் அதைச் செய்பவர் பாதம் அவர்கள் தலை மீது என்றுமுரைக்கும் இச்சாசனம் கேட்பாரற்று காலஓட்டத்தில் அழியும் நிலையிலுள்ளது.
0 comments:
Post a Comment